பெரம்பலூர் அங்காளம்மன் கோவில் தெருவில் குடிநீர் இணைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்த பின்பும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமலே உள்ளது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவதோடு, வாகனங்களை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.