நாய்கள் தொல்லை

Update: 2026-02-15 13:29 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர பகுதிகளில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளது.குறிப்பாக பாளையம், சாமியார் மடம், பெரிய கடை தெரு, இந்திரா நகர், அந்தோணியார் கோவில் தெரு, நாடியம்மன் கோவில் ரோடு ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றி திரிகிறது. சாலையில் இரு சக்கர வாகனங்களின் குறுக்கே செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாணவ,மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்