சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.