நாகை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் கூட்டமாக அங்கும், இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பன்றிகளால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், பன்றிகளை பிடித்து செல்லவும் நடவடிக்கை எடுப்பார்களா?