நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியில் பழைய வங்கி காலனி உள்ளது. இந்த பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விரட்டி கடிக்க வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஜெயராம், ராமவர்மபுரம்.