சேதமடைந்த பள்ளி கட்டிடம்

Update: 2022-08-09 13:29 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சூடிபுதூரில் உள்ள ஊராட்சி மன்ற பள்ளி கட்டிடம் பல இடங்களில் விரிசல் விட்டும் பக்கவாட்டில் சுவர், செங்கல் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த பள்ளிக்கு வரும் மாணவர்கள் சிரமத்துடன் தான் வருகின்றனர். பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து உயிர்பலி எதுவும் நிகழ்ந்து விடுமோ என பெற்றோர் அஞ்சுகின்றனர். எனவே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்