நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் காம்பவுண்டு சுவரின் அருகில் பட்டுப்போன மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தின் அருகில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. அந்த பகுதியில் வீசும் காற்றில் எப்போது வேண்டுமானாலும் இந்த மரம் முறிந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெஸ்டின் ரபேல்,பனவிளை