மேல்நிலை குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2022-06-11 15:19 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருவாலங்காடு பெரியகளக்காட்டூர் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இதன் கட்டிடம் சில இடங்களில் உடைந்தும், சிமெண்ட் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் குடிநீரை சுத்தம் செய்ய வரும் ஊழியர்கள் குடிநீர் தொட்டியில் ஏறுவதற்கு பயந்து , தொட்டியை சுத்தம் செய்வதில்லை. இதனால் தண்ணீரின் நிறம் மாறுபடுவதோடு, சுகாதாரமற்ற தண்ணீரை மக்கள் பயன்படுத்தும் சூழல் ஏற்படுகிறது. எனவே மக்களின் நலன் கருதி மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்