கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு ஏ.டி.எம். மையங்கள் இயங்கி வருகின்றன. ஏ.டி.எம். மையங்களில் பெரும்பாலானவற்றில் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பணம் இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக ஒரு ஏ.டி.எம். மையம் பழுதானால் அதை சரிசெய்ய சில நாட்கள் ஆகிறது. மேலும் தொடர் விடுமுறை நாட்களிலும் ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே ஏ.டி.எம். மையங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.