கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிக்குட்பட்ட சேலம் நெடுஞ்சாலையில் இருக்கும் உருது தொடக்கப்பள்ளி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் ஓராண்டு காலமாக பணிகள் முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பாதியில் நிற்கும் அந்த பள்ளிக் கட்டிடப் பணிகளை விரைவில் முடித்து பள்ளி குழந்தைகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-மாதவராமன், கிருஷ்ணகிரி.