விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி முழுவதும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் பார்க்கிங்காக மாறிவருகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.