பரங்கிப்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப தற்போது இந்த பள்ளியில் போதுமான அளவு கழிப்பிட வசதியில்லையென்றும், இருக்கிற கழிப்பிட வசதிகள் படுமோசமாக உள்ளதாகவும், கழிவறைகளுக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை என்று மாணவிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆகவே இந்த பள்ளியில் மாணவிகள் நலன் கருதி போதுமான கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
