பெரம்பலூர் நகர் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. நேரிடையாக நடைபெறாமல் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும், வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும், வெள்ளை தாளில் லாட்டரி சீட்டுகளின் எண்களை மட்டும் எழுதி வைத்து கொண்டும் விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றனர். எனவே போலீசார் நகர்ப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.