பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து மறைமுகமாக விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் போலீசாரும், உணவு பாதுகாப்பு அலுவலரும் கண் துடைப்புக்காக ஆய்வு நடத்தி வருகின்றனர் தவிர, முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் இளைஞர்கள் சிலர் சீரழிந்து வருவததோடு, தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் எளிதாக கிடைப்பதால் அதனை பயன்படுத்த வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் புகையிலை பொருடகள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.