தமிழக அரசு பொது இடங்களில் விளம்பர தட்டிகளை வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இது பற்றி நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன. ஆனால் அரியலூர் நகரில் பல இடங்களில் மின்சார கம்பங்களில் விளம்பர பதாகைகள் சிறிய அளவு முதல் 20 அடி வரை அகலம் உள்ள பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது ஆடி மாத காற்று வேகமாக அடித்து வருகிறது. பல மின்கம்பங்கள் கான்கிரீட் கலவைகள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.