கரூர் மாவட்டம், புன்செய் புகழூர், காகித ஆலை ஆகிய பேரூராட்சிகள், என்.புகழூர் ஊராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோர் புகழூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் புகழூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இந்த கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இதுவரை சொந்தமான கட்டிடம் இல்லை. இதனால் வாடகை கட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு கடன் சங்கம் போதிய பாதுகாப்பு இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.