கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை கிராம பகுதியில் ஏராளமான குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. அவை வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை உடைத்து சேதப்படுத்துவதுடன், குழந்தைகள் மற்றும் பொதுமக்களை கடிக்க வருகின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.