சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்கள்

Update: 2022-08-08 13:18 GMT

திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் அழகனம்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள பழமை வாய்ந்த மரங்கள் பட்டுப்போன நிலையில் அதன் மரக்கிளைகள் காய்ந்து காணப்படுகிறது. இதன் கிளைகள் பலத்த காற்று அடிக்கும்போது அவ்வப்போது முறிந்து விழுந்து வருகிறது. இந்த சாலையின் வழியாக வாகனங்கள் செல்லும்போது இந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தால் பெரும் விபத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்