கடலூர் மஞ்சக்குப்பத்தில் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். நீதிமன்றம் எதிர்ப்புறம் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்கும் 5-க்கும் மேற்பட்ட விளக்குகள் பழுதடைந்து உள்ளது.இதனால் இருள் சூழ்ந்த இடத்தை கடக்கும் போது பெண்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். ஆகவே பழுதான விளக்குகளை பழுது நீக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.