அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீன்சுருட்டி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இந்த அரசு விடுதி சுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது இங்கு தங்கி வந்த மாணவர்கள் விடுதி அருகில் உள்ள ஒரு வீட்டில் வாடகை கட்டிடத்தில் இருந்து வருகிறது. தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மாணவர்கள் விடுதியில் இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே இந்த பழைய கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, அந்த இடத்திலேயே புதிய விடுதி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.