புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இருந்து செங்கப்பட்டி வரை சாலையோரத்தில் பி.எஸ்.என்.எல். துறையினர் வயர் பதிப்பதற்காக குழி தோண்டினர். பின்னர் பணிகள் முடிவடைந்து பல்வேறு இடங்களில் சரிவர குழிகள் மூடப்படாமல் உள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் எதிர் வரும் வாகனங்களுக்கு வழிவிட இடம் இல்லாமல் சிரமம் அடைகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.