திருவெண்ணெய்நல்லூர் பாலாஜி நகரில் அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது. இங்கு வரும் மதுபிரியர்கள், மதுகுடித்து விட்டு ஆபாசமாக பேசுவதோடு மட்டுமில்லாமல் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பெண்கள், மாணவிகள் ஒரு வித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் 2 டாஸ்மாக் கடையும் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?