தூத்துக்குடி மாட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா செக்காரகுடியை சேர்ந்தவர் மனோன்மணி. இவர், தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பொட்டலூரணி விலக்கு அருகே வழிகாட்டி பலகை இல்லாததால் வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைவதாக 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக பொட்டலூரணி விலக்கில் செக்காரக்குடி செல்லும் வழி என்று பெயர் பலகை அமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.