சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

Update: 2022-08-08 10:39 GMT
நாகை மாவட்டம் திருமருகல் பகுதி நரிமணத்தை அடுத்த சுல்லாங்கால் கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த நிலையில் சுகாதார வளாகம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக கழிவறைகள், குளியலறைகளில் உள்ள பைப்புகள் உடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சுகாதார வாளகத்தை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்