நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், பெரியகரசப்பானையம் நான்கு ரோட்டில் இருந்து கருப்பண்ணார் கோவில் வழியாக கட்டமராபாளையம் செல்லும் வழியில் கயிறு தயாரிக்கும் ஆலை உள்ளது. இதனால் சாலை முழுவதும் தேங்காய் மட்டை நார் கிடப்பதால் முன்னாள் செல்லும் வாகனங்களால் துகள் பறக்கிறது. இது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் படுவதால் வாகனம் ஓட்ட சிரமப்படுகின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமசிவம், ஓலப்பாலையம், நாமக்கல்.