பரமத்தி வேலூர் இருந்து கொடுமுடி செல்லும் தார் சாலை கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை வழியாக செல்லும் சாலையில் இணைகிறது. இந்த சாலை வழியாக ஏராளமான பஸ்கள், லாரிகள், கார்கள் என சென்று வருகின்றன. இந்நிலையில் பரமத்திவேலூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் லாரிகள், கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று இணைப்பு சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.