கோத்தகிரி கடைவீதி பகுதியில் செல்லும் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் ஓடையின் நீரோட்டம் தடைபடுவதால் மழைநீர் வெளியேறி அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே ஓடையை ஆக்கிரமித்துள்ள புதர் செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.