காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குழிகள் காணப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் கால் தவறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்லும் பஸ்களும் பழுதடையும் நிலை காணப்படுகிறது. எனவே அங்கு குண்டும், குழியுமாக காணப்படும் தரைத்தளத்தை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.