விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் உழவர் சந்தை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை திண்டிவனம் அல்லது விழுப்புரம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் சீரமப்படுவதோடு, அவர்களுக்கு கூடுதல் செலவும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க விக்கிரவாண்டியில் உழவர்சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.