பண்ருட்டி தாலுகா வேகாக்கொல்லை ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மேற்கூரை 2012-ம் ஆண்டு தானே புயல் காரணமாக சேதமடைந்தது. இதனால் மழைக்காலங்களில் கட்டிடத்தின் உள்ளே தண்ணீர் ஒழுகுகிறது. இதன் காரணமாக வேறு ஒரு தனியார் இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் இயங்கி வருகிறது. எனவே புதிதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.