திருச்சி மாவட்டம், ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் ஆண்கள், பெண்களுக்கென கட்டண கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களிடம் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக செல்லும்போது, ரூ.5, 10, 15 என்று அவர்கள் இஷ்டத்துக்கு கட்டணங்களை வசூல் செய்கின்றனர். இதனால் பல நேரங்களில் பக்தர்களுக்கும், கட்டணம் வசூல் செய்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. உள்ளே செல்லும்போது மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கழிப்பிடத்தை சுத்தமாக வைக்கவும், அதிக கட்டணம் வசூல் செய்வதற்கு தடை விதிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.