தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியில் கல்லணைக்கால்வாயின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தடுப்புச்சுவரில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பாலம் வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாலத்தில் உள்ள தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?