பெரம்பலூர் நகரில் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதனால் மது, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு ஏற்கனவே அடிமையான இளைஞர்கள் சிலர் தற்போது கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். போதையினால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. சிலர் போதையால் தடம் மாறி குற்ற வழக்குகளில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.