நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் வந்து நடமாடுகின்றன. சாலைகளில் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்களை காட்டு பன்றிகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.