வழிப்பறியில் ஈடுபடும் மர்மநபர்கள்

Update: 2022-08-06 13:33 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பகுதியில் சாலையோரத்தில் அமர்ந்து மதுப்பிரியர்கள் அதிகளவில் மது அருந்துகின்றனர். இவர்களில் சில மர்மநபர்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். மேலும், பகல் நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்ல பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூர் அருகே உள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் அச்சம் போக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்