கச்சிராயப்பாளையம் அருகே ஏர்வாய் பட்டினம் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மது வாங்கி செல்பவர்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து மது குடிக்கின்றனர். அப்போது அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் வீன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.