திறப்பு விழா காணாமலேயே சேதமடையும் கட்டிடம்

Update: 2022-08-06 11:40 GMT

சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் பலத்த சேதமடைந்து வருகிறது. எனவே அந்த கட்டிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்