தெருநாய்களால் அச்சம்

Update: 2022-08-05 17:23 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் குழந்தைகள், முதியவர்கள் என்று பலரையும் துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் வீதிகளில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்