சுகாதாரமற்ற கழிவறைகள்

Update: 2022-08-05 16:50 GMT

அரியலூர் பஸ் நிலையத்தில் பயணிகள் இயற்கை உபாதைகள் கழிக்கும் வகையில் இலவச கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறைகள் சரிவர சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதினால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்