கழிப்பறை வசதி தேவை

Update: 2022-08-05 14:49 GMT

அய்யலூரில் வண்டி கருப்பணசுவாமி கோவில் உள்ளது. வடமதுரை, அய்யலூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வந்து கிடாவெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்கின்றனர். இதனால் கோவில் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும். ஆனால் இங்கு பக்தர்களுக்கு முறையான கழிப்பறை வசதி இல்லை. இதனால் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அய்யலூர் வண்டி கருப்பணசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்