கடலூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரான விருத்தாசலத்தில் தினந்தோறும் கடைவீதி, பாலக்கரை, ஜங்ஷன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய போலீசார் பணியில் இருந்தாலும், அதனை கண்டுகொள்வதில்லை. இதனால் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே விருத்தாசலம் நகரத்திற்கு கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்து, போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.