கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் வி.குமாரமங்கலம் கிராமத்தில் ஏழை-எளிய மக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பின்றி அந்த கட்டிடம் பாழடைந்தது. இதனால் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் அந்த கட்டிடத்தை சுற்றிலும் புதர்மண்டி காணப்படுகிறது. ஆகவே செடி-கொடிகளை அகற்றி, பாழடைந்த சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.