அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ரெயில் மூலம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரியலூர் சென்று தான் ரெயில் ஏறி செல்லும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாச்சலத்திற்கு ரெயில் தடம் அமைத்து புதிதாக ரெயில் விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.