நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நடைபாதை சரியாக அமைக்கப்படாததால் மழை பெய்யும் போது அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். நடைபாதையை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.