பயனற்ற கிராம சேவை மைய கட்டிடம்

Update: 2022-08-05 12:39 GMT
கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சியில் உள்ள நடுப்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.13 .20 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை திறந்து வைத்து செயல்படவில்லை. எனவே உள்ளாட்சித்துறை உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிராம சேவை மையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பணியாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்