ரிஷிவந்தியம் தாலுகா பெரிய பகண்டை முருகன் கோவில் அருகே அனுமதி பெறாமல் கால்வாய் அமைக்க பள்ளம் தொண்டப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்ததால் கால்வாய் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. இதற்காக தொண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருப்பதால், அதில் குழந்தைகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.