விக்கிரவாண்டியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சின்னஏரி, பெரிய ஏரி, அரண்டேரி, ஓட்டேரி ஆகிய 4 ஏரிகள் மூலம் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆனால் தற்போது ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதலும் இ்ந்த ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது. எனவே உடனடியாக ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, கழிவுகள் கொட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.