திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு திருத்துறைப்பூண்டி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆஸ்பத்திரி வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஸ்பத்திரி வளாகத்தில் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.