மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பல நாட்களாக நடைபெற்று வரும் இந்த பாலம் கட்டும் பணி முடிவடையாததால் வாகனஓட்டிகள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர்.எனவே வாகனஓட்டிகளுக்கு பசும்பொன் நகர், வெள்ளை பிள்ளையார்கோவில் பேட்டை வழியாக மாற்றுப்பாதை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?