மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை இடிந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வருவோர் ஒருவித அச்சஉணர்வுடனே வந்து செல்கின்றனர். எனவே இப்பகுதியில் புதிய ரேஷன்கடை கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?